tamilnadu

img

செப்.6 காவலர் நாளாக கொண்டாடப்படும்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், இந்த நாளில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். ஒவ்வெரு மாவட்ட காவல்துறையின் சிறப்புகளை சொல்லக்கூடிய வகையில், அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சார்பில் கண்காட்சிகள், ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்தார்.