districts

img

சாலையில் வழிந்தோடும் சாக்கடை துர்நாற்றத்தால் கடும் அவதி:  கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர், டிச.19-  தஞ்சாவூர் அருகே பள்ளியேரி கிராமத்தில் சாலை கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இப்பகுதியில், சாலைகளை சீரமைத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலா கிறது. சாலையை சீரமைக்கக் கோரி, ஊராட்சித் தலைவர்  மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் திங்கள்கிழமை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என முழக்கமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் காவல்துறையினர் சாலை மறி யலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காவல்துறை யினர் பேசிய நிலையில், பத்து நாட்களுக்குள் நட வடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிரா மத்தில் கடந்த பல ஆண்டாக சாலைகள் குண்டும் குழி யுமாக உள்ளது. தெருக்களிலும், சாலைகளிலும் சாக்கடை  வழிந்தோடி கடும் துர்நாற்றம் வீசுகிறது. எங்கள் கிரா மத்திற்கு அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.