வேதாரண்யம், ஜீன் 19 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த பிராந்தியங்கரை ஊராட்சியில் ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிராந்தியங்கரை ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்ற னர். இந்தப் பகுதியில் குடிநீர் சரியாக வழங்கவில்லை என பொதுமக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் தெரி வித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்ட நிலை யில், தற்போது ஒரு மாதமாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை. வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர், கரியாப்பட்டி னம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை யில், “தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வர வேண்டும்” என பொது மக்கள் கோரிக்கை வைத்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடு பட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தால், போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியலில் சிபிஎம் வேதா ரண்யம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், எஸ்.முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.