tamilnadu

img

சென்னையில் 'ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்' அறிமுகம்!

சென்னையில் 'ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்' என்ற புதிய பாதுகாப்பு சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்' என்ற புதிய பாதுகாப்பு சாதனத்தை சென்னையில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள் உள்ளிட்ட 200 இடங்களில் நிறுவப்பட உள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
360° டிகிரியில் பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன் கொண்ட இந்த சாதனத்தில் சிவப்பு ஆபத்து பொத்தான் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. ஆபத்து நேரத்தில் அந்த பொத்தானை அழுத்தினால், உடனடியாக காவல்துறைக்கு அழைக்கவும், அருகில் ரோந்துப் பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும். இதை தொடர்ந்து ரோந்து வாகனங்களில் காவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து கேமரா பதிவு மூலம் புலனாய்வு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.