சென்னை,ஏப்.29- காலனி என்ற சொல் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.