india

img

ஏ.டி.எம்-இல் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மும்பை,ஏப்.29- ஏ.டி.எம்-இல் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் இருக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக அனைத்து வங்கி ஏ.டி.எம்களிலும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அதிகளவில் இருப்பதால் ஏராளமான மக்கள் 100, 200 ரூபாய் நோட்டுகள் பெற முடியாமல் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு அதிகம் கிடைப்பதற்காக அனைத்து ஏ.டி.எம்களிலும் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் இருக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.