திருவண்ணாமலை,ஏப்.3-திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மணி (60). மேல்செங்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன் சிற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் விபத்து ஏற்பட்டு சுமார் 1 மணி நேரமாகியும், 108 ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மணி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொது மக்கள் திருவண்ணா மலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மேல் செங்கம் காவல்துறையினர், இதுகுறித்து சம்மந்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக கூறியதைய டுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த விபத்து நடந்த இடத்தில் அதிகளவில் விபத்து ஏற்பட்டு உயிரழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த பேரி கேட் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.