திருவண்ணாமலை, ஏப்.1-பாஜக-அதிமுக-பாமகவேட்பாளர்களை தோற்கடிப்போம் என்று 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த கட்டமடுவு பகுதியில், எட்டு வழிச் சாலை திட்டத்தால் உயிரிழந்த விவசாயிக ளுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிப்பது சம்மந்தமாகவும், ஆலோசனை நடத்தப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத் தில் 8 வழிச் சாலையால் பாதிக்கப் பட்ட செய்யாறு, வந்தவாசி, சேத்துப் பட்டு, போளூர், செங்கம், தாலுக்காவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் 8 வழிச் சாலையால் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர்.அங்கு அதிமுக மற்றும் பாமக பாஜக கட்சியினர் அவர்களை நினைவேந்தல் நிகழ்சியில் கலந்து கொள்ளக் கூடாது என காவல்துறையின் உதவியுடன் விவசாயிகளை மிரட்டி அனுப்பியதாகக் கூறப் பட்டது.
இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் கட்டமடுவு பகுதியில் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது, எதிர்வரும் சட்டமன்ற இடைதேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கட்சிக்கு வாக் களிக்க கூடாது என கூட்டத்தில் ஒருமனதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மேலும், திமுகவிற்கு ஆதரவாக, 8 வழிச் சாலையால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன், மக்களவை தேர்தல் நடைபெறும் தொகுதிகளான, காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், ஆரணி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதேபோல், குடும் பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து, விவசாயிகளிடம் சென்று அதிமுக, பாஜக, பாமக, கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது எனவும், திமுக விற்கு வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தீர்மானங் களை இயற்றியுள்ளனர்.