tamilnadu

சித்திரை பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 2895 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை, ஏப். 17-சித்திரை பவுர்ணமி தினத்தில் மக்களவை தேர்தலும் நடைபெறுவதால் திருவண்ணாமலையில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதனால் தேர்தல் மற்றும் சித்திரை பவுர்ணமி என்று தனித்தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சித்திரை பவுர்ணமிக்கு முத்தரசி, ஷியாமளா ஆகிய 2 சிறப்பு எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில், கிரிவலம், போக்குவரத்து என்று 3 ஆக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு மட்டும் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சித்திரை பவுர்ணமிக்கு மட்டும் தனியாக 1,600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று டி.ஐ.ஜி வனிதா தெரிவித்தார்.சித்திரை பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலைக்கு 2895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை செல்ல 61 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.மேலும் காவல் உதவி மையங்கள் அமைத்து பக்தர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற் பட்ட இடங்களில் 108 ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்படுகின்றன.