தீபாவளி விடுமுறையை முன்னிட்டு 16,540 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் மக்கள் சொந்த தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.பின்னர் தீபாவளி முடிந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திரும்புவதற்காக 17,719 சிறப்பு பேருந்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தற்போது ஆயுத பூஜை விடுமுறைக்காக 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.