திருவள்ளூர், ஜூலை 19- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நெமிலி ஊராட்சி யில் காஞ்சனா நகரில் 80க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசிக்கின்றன. வறுமையில் வாழும், இரு ளர் இன மக்கள், கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் வெளியே சென்று உணவு தேட முடிய வில்லை, வேலையும் இல்லை. இதனால் உண விற்கு தட்டுப்பாடு ஏற்படவே, எலியாகிலும் பிடித்து வந்து உண்ணலாம் என்பதற்காக கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் ராஜா (45), ஆறுமுகம் (19) ஆகிய இருவரும் அருகில் உள்ள வயல் வெளிகளுக்கு சென்றனர். எலிகளை பிடிக்க சென்ற வர்கள் இரண்டு நாட்கள் ஆகி யும் வீடு திரும்பவில்லை. இத னால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் நிலத்தில் இரண்டு பேர் இறந்து கிடப்ப தாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை ராஜாவின் மனைவி மங்கம் மாள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, இறந்து கிடப்பது தன் கணவர் ராஜாதான் என்பதை உறுதி செய்தார். தனது கணவரும், ஆறு முகம் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் மங்கம்மாள் புகார் அளித் துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடல் களை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை
இருளர் இனத்தை சேர்ந்த ராஜா, ஆறுமுகம் எலி பிடிக்கும் போது மின்வேலி யில் சிக்கி இறந்துள்ளதாக தெரிகிறது. இப்படி சட்ட விரோ தமாக மின்வேலி அமைத்த வர்களை கைது செய்ய வேண்டும். வாழ்வாதாரம் இன்றி எலிகளை பிடித்து உண்ணும் நிலையில் உள்ள இருளர் இன குடும்பங்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.