tamilnadu

img

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்றுகள் நடும் விழா

அவிநாசி, ஜூன் 2-அவிநாசி அடுத்த மலையபாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, களஞ்சியம் விவசாய சங்கத்தினர் மற்றும் எல்என்டி நிறுவனத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.ஆண்டுந்தோறும் ஜூன் 5ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அவிநாசி அடுத்த மலையபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியைச் சுற்றி களஞ்சியம் விவசாயிகள் சங்கம் மற்றும் எல்என்டி நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகள் அனைத்தும் பாண்டிச்சேரியில் இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவையாகும். முதல் மரக்கன்றை களஞ்சியம் விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மனு நீதி மாணிக்கம் நட்டார். இவ்விழாவில் களஞ்சியம் விவசாய சங்கத்தின் நிர்வாகி சுப்பிரமணி, எல்என்டி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.