districts

img

அரசினர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

கும்பகோணம், ஏப்.11- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி கணிதத் துறை சார்பாக 200 மரக்  கன்றுகள் கல்லூரி முதல்வர்  நா.தனராஜன் தலைமையில் நடப்பட்டது. நாக் (NAAC) தர  மதிப்பீட்டுக் குழு வருகை யை முன்னிட்டு கல்லூரியில் தூய்மைப் பணிகள் மேற்  கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கணி தத் துறை இராமானுஜன் பூங்காவை புனரமைக்கும் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவை கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தொடங்கி வைத்து “மரக் கன்றுகள் நடுதலின் அவ சியம் பற்றி எடுத்துரைத்த தோடு, 500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளதாக” கூறி னார்.  முதற்கட்டமாக செவ்வா யன்று கணிதத் துறைத் தலை வர் லெப்டினென்ட் அ. எட்வர்ட் சாமுவேல், பேராசிரி யர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் 200 மரக் கன்றுகளை வழங்கினர். அவற்றினை இராமானுஜன் பூங்காவிலும், கல்லூரி வளா கத்திலும் கல்லூரி முதல்வர், அனைத்துத் துறைத் தலை வர்கள், பேராசிரியர்கள், கல்லூரி நூலகர், நிதியாளர், கண்காணிப்பாளர் மற்றும் மாணவ- மாணவியர்கள் நட்டனர்.