கும்பகோணம், மே 7- தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்து முறையாக பராமரிக்கும் இத்திட்டத்தை கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் துரையரசன் தொடங்கிவைத்தார். கல்லூரி வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கு மாணவர்கள் உரிமையாளராக நியமித்து அவர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தஞ்சை மாவட்ட பசுமை குழு உறுப்பினர் பேராசிரியர் சுகுமாறன் பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் தமிழ் துறை பேராசிரியர் மதிவாணன், தேர்வு நெறியாளர் ராமசுப்பிரமணியன், வேதியல் துறை தலைவர் மீனாட்சிசுந்தரம், கணிதத் துறை தலைவர் குணசேகரன், விலங்கியல் துறை பேராசிரியர் பாஸ்கர சஞ்சீவி, சுற்றுச்சூழல் சங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தாவரவியல் துறை பேராசிரியர்கள் தியாகராஜன், ஜனகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.