புதுதில்லி,மே.12- நாட்டில் எல்லைகள் செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
அகர்தலாவில் உள்ள மத்திய வேளாண்துறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வி. நாராயணன், நாட்டின் எல்லைகள் மற்றும் கடற்கரையை கண்காணிக்க குறைந்தபட்சம் 10 இந்திய செயற்கைக்கோள்கள் தற்போது 24 மணி நேரமும் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் 7,000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை மற்றும் வடக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் இந்த செயற்கைகோள்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை இஸ்ரோ, தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடையது உள்பட 127 இந்திய செயற்கைக்கோள்களை ஏவியிருக்கிறது. இந்தியாவுக்கு என 12க்கும் மேற்பட்ட உளவு மற்றும் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் இயங்கி வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.