உடுமலை, ஆக. 12- தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் மாநில மாநாடு தஞ்சாவூரில் வரும் 15-17ஆம் தேதி வரை நடைபெறு வதையொட்டி உடுமலை பாலாஜி திருமணமண்டபத்தில் ஆய்வாளர் பேரவை அமைப்பின் தலைவர் தண்டபாணி தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் திங்களன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலா ளர் சிவசங்கர், ஓய்வுபெற்றோர் அரசு ஊழியர் சங்கத்தின் செல்லதுரை, தனுஷ்கோடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர் சங்கத்தின் தோழன்ராஜா, சுதா சுப்பிரமணி யன்,மாதர் சங்கத்தின் மாலினி, வசந்தி உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மக்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில் உடுமலை, குடி மங்கலம் பகுதியில் ஊர்க்கூட்டம் என நடைபெற்றது.