மயிலாடுதுறை, ஆக.3- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மயிலாடு துறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளி டம் ஆகிய ஒன்றியங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. குடும்ப வன்முறை தடுப்போம், சமத்துவம் காத்து நிற்போம் என்ற முழக்கத்தோடு நடைபெற்று வரும் விழிப்பு ணர்வு பிரச்சார இயக்கத்தில் 30 குழுவினர் மாவட்டம் முழு வதும் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடி ஒன்றியம் சார்பில் திருக்கடையூரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநில துணைத்தலைவர் ஜி.கலைச்செல்வி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், அம்மை யப்பன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் டி.ஆர்.ராணி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். மயிலாடுதுறை மாப்படுகையில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மாரியப் பன், மாதர் சங்க மாவட்டச் தலைவர் ரா.சரிதா, மாவட்டச் செயலாளர் கு.வெண்ணிலா மாவட்டக் குழு உறுப்பினர் ப.அம்பிகா, கிளை உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.