திருப்பூர், பிப். 13 – மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து திருப் பூர் அனுப்பர்பாளையம், பாண்டி யன் நகர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. அனுப்பர்பாளையம் ஆத்துப் பாளையம் சாலையில் புதனன்று மாலை நடைபெற்ற பட்ஜெட் எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செய லாளர் வி.பி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசின் பட்ஜெட்டில் எல்ஐசி உள் ளிட்ட பொதுத்துறை பங்குகளை விற்கும் முயற்சி, காரப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை கண்டித்து மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் பி.ஆர்.நடராஜன், முதல் மண்டலச் செயலாளர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ரங்கராஜ், நகரக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணி யம், பி.பாபு, வி.லட்சுமி, எஸ்.குணசுந்தரி, அ.மணவாளன், அ.உமாநாத் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் ச.நந்த கோபால் நன்றி கூறினார். திருப்பூர் வடக்கு ஒன்றியத் திற்கு உட்பட்ட பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இடதுசாரி கட்சிகளின் பிரச்சாரம் நடைபெற்றது. இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி கிளைச் செயலா ளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் இரண்டாவது மண்டலச் செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் செல்வராஜ் ஆகி யோர் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.