திருப்பூர், ஜூலை 28 - திருப்பூர் மாநகரின் மையப் பகுதி யில் தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்புச் செய்திருந்த ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்டது. திருப்பூர் வாவிபாளையம் சடையப்பன் கோயில் எதிரில், மாநகராட்சிக்கு சொந்த மான 15.5 சென்ட் நிலத்தை பிரேமா பள்ளி நிர்வாகம், 1975ஆம் ஆண்டில் குத்தகை அடிப்படையில் பெற்று பள்ளிக்கூடம் நடத்தி வந்தது. குத்தகை காலம் முடிந்த நிலையில் பிரேமா பள்ளி நிர்வாகம் இந்த இடத்தைக் காலி செய்ய மறுத்தது.
இத னால், மாநகராட்சி நிர்வாகம் 1982 ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்தது. இதன் அடிப்ப டையில் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 1988 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், மேற்படி இடத்தை பள்ளி நிர்வாகம் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து பிரேமா பள்ளி நிர்வாகம் மேல் முறையீடு மனு செய்தது. அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், நிலத்தை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒப்ப டைக்கும்படி வற்புறுத்தப்பட்டது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் திருப்பூர் மாந கராட்சி மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட இப்பகுதியில் மாநகராட்சி செயற் பொறியாளர் முகமது ஷபியுல்லா தலைமை யில் மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறை பாதுகாப்புடன் திங்களன்று அந்த இடத்தை மீட்டனர். 38 ஆண்டுகளாக இழுத் தடிக்கப்பட்ட மாநகராட்சி நிலப் பிரச்ச னையில் தற்போது முடிவு காணப்பட் டுள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.