tamilnadu

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தனிமனித இடைவெளியின்றி மருத்துவ முகாம்

திருப்பூர், ஜூலை 10- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத் துவ முகாம் நடத்தப்பட்டது, மாற்றுத் திறனாளிகளி டையே பெரும் அதிருப் தியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. தற் போது பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 265 ஆக உயர்ந்து உள்ள நிலையில், அனைவரும் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இச்சூழலில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வெள்ளியன்று மாற்றுத்திற னாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் மாற்றுத்திறனாளிகள் கூட்டமாக நிறுத்தப்பட்டு மருத்துவ பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவர்களும் மாற் றுத்திறனாளிகளிடம் எந்த அறிவுறுத்த லும் சொல்லவில்லை. ஆட்சியரக வளாகத்திலேயே இத்தகைய சம்ப வம் அரங்கேறியிருப்பது மாற்றுத் திறனாளிகளிடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும், வாரந்தோறும் வெள்ளி யன்று அரசு தலைமை மருத்துவமனை யில் நடைபெறும் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் அங்கு கொரோனா தனிமைப்படுத்தப்பட் டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு வதன் காரணமாக தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.