திருப்பூர், ஜன. 26 – நாடு முழுவதும் பல்வேறு பகுதி களிலும் அரசியல் கட்சியினர், குடியி ருப்போர் சங்கத்தினர், பொது மக்கள் ஆர்வத்துடனும், உணர்வுப்பூர்வமாக வும் 71ஆவது குடியரசு தின விழாவைக் கொண்டாடினர். பல பகுதிகளில் அர சியல் சாசன முகப்புரையை வாசித்து அதைப் பாதுகாப்போம் என உறுதி யேற்றனர். திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பாக ஞாயிறன்று காலை மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாவட் டக்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து அரசியல் சாசன முகப்புரை வாசகங்களை நகரக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன் முன் மொழிய, மாநகரச் செயலாளர் பி.முரு கேசன் தலைமையில் அனைவரும் வழிமொழிந்து உறுதியேற்றனர். அதேபோல் திருப்பூர் தெற்கு மாநகரம் வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசியல் சாசன முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளி யங்காடு மேற்குக் கிளைச் செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற் றது. இதில் கட்சியின் மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் குடியரசு தின உரையாற்றினார். மாநகரக்குழு உறுப்பினர்கள் செந்தில், சரவணன், சஞ்சீவ், குணசேகரன் உள்பட திரளா னோர் கலந்து கொண்டு உறுதி யேற்றனர். மிஷின்வீதி பகுதியில் தேசிய கொடியை வாலிபர் சங்க மாவட்டத் தலைவரும், கட்சியின் தெற்கு மாநக ரக்குழு உறுப்பினருமான பா.ஞான சேகரன் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து நகர்க்குழு உறுப்பினர்கள் ஜி.செந்தில்குமார், எஸ்.சரவணன், கிளைச் செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்றனர். காங்கேயம் ரோடு வள்ளியம்மை நக ரில் குடியிருப்போர் சங்கம் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் சார்பில் குடிய ரசு தின விழா நடைபெற்றது. இதில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் அ.நிசார் அகமது, வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.பொன்ராம், காங்கிரஸ் சார் பில் கோபால்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சி.சுப்பிரமணியம் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று உரை யாற்றினர். அதேபோல் 14ஆவது வார்டு அமர்ஜோதி கார்டனில் குடியி ருப்போர் நலச் சங்கத் தலைவர் டி.கே.தண்டபாணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விஜயபுரி கார்டனில் பகுதி குடிமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து குடியரசு தின விழாவைக் கொண்டாடி னர். பெருமாநல்லூரில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக குடியரசு தின விழாவை முன்னிட்டு வள்ளிபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கட்சிக் கொடியை கிளைச் செயலாளர் ரங்கசாமி ஏற்றி வைத்தார். அரசியல் சாசன முகப்புரையை ஜி.சண்முகம் வாசிக்க அனைவரும் வழிமொழிந்து உறுதியேற்றனர். அனுப்பர்பாளை யம் புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 71ஆவது குடியரசு தின விழா கோலாகாலமாக கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் கல்வி துறையி னர், பெற்றோர், பல்வேறு கட்சி தலை வர்கள், ஊர் மக்கள், பள்ளி ஆசிரியர் கள், பள்ளி மாணவர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர். தேசியக் கொடியேற்றி வைத்து பள்ளி மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டன.
தாராபுரம்
குடியரசு நாளையொட்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபு ரம் கட்சி அலுவலகம் முன்பு குடியரசு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் குடியுரிமை யில் மதத்தை புகுத்தாதே. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஒத்து ழைப்போம். மக்கள் தொகை பதி வேட்டை புறக்கணிப்போம். குடியு ரிமைத் திருத்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம். தமிழக அரசே தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை கைவிடு என உறுதி மொழி ஏற்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சண்முகம், தாலுகா செயலாளர் என்.கனகராஜ், இடைக்கமிட்டி உறுப்பினர் ஆர்.வெங் கட்ராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உடுமலை
உடுமலைபேட்டை நகரக்குழு வின் சார்பில் குட்டை திடல் காந்தி சிலைக்கு முன்பு அரசியல் சாசன பாது காப்பு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கமிட்டி உறுப்பினர் சுதா சுப்பிரமணி யம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், எஸ்.ஆர்.மதுசூத னன், நகர செயலாளர் தெண்டபாணி ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டு 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவிநாசி
இதேபோல், அவிநாசி ஒன்றியம், ஆட்டையம்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றப்பட்டது. இதில் அவிநாசி ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம் தலைமையில் சிஐடியு நிர்வாகிகள் சண்முகம், கனக ராஜ், வேலுச்சாமி உள்ளிட்ட பலர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதி ராக உறுதிமொழி ஏற்றனர்.
கோவை
இதேபோல், கோவை வடக்கு நகரக் குழு பகுதிக்குட்பட்ட கண்ணப்ப நகர், சம்பத் வீதி பகுதிகளில் இந்திய அரசியல் சாசனத்தின் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் சிபிஐ(எம்) வடக்கு நகரச்செயலாளர் என்.ஆர்.முருகேசன், மாதர் சங்க வடக்கு நகர தலைவர் பங்கஜவள்ளி, மாற்றுத்திற னாளிகள் சங்க வடக்கு நகர செயலா ளர் சிவகாமி, வாலிபர் சங்க வடக்கு நகர தலைவர் நிசார் அகமத், பொருளா ளர் விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இருகூரில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) கிளை செய லாளர் மோகன் பாபு மற்றும் விஜயராக வன், வாலிபர் சங்கம், மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். புலியகுளத்தி லும் குடியரசு தினவிழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு அலுவல கத்தில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் உறுமொழியை வாசிக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். கோமதி, கே.துரைராஜ், ப.மாரிமுத்து, சி.பரமசிவம், எஸ்.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதே போல், அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற் றது.
உதகை
நீலகிரி மாவட்டம், கூடலூரில் காந்தி சிலை முன்பு நடைபெற்ற உறுதி யேற்பு நிகழ்ச்சிக்கு கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமை வகித்தார். இதில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத் தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதி நிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். பந்த லூர் பஜாரில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை கமிட்டி செயலாளர் எல்.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். கோத்தகிரி பேருந்து நிலையம் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் கே.மகேஷ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட செயலாளர் பாஸ் கரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், சஞ்சீவி ராஜ், ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங் கத்தின் தலைவர் எஸ்.ராஜரத்தினம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் இடைக்கமிட்டி பொருளாளர் பூவரசன், மாணவர் சங்கத்தின் அமைப்பாளர் யோகராஜ், சிபிஎம் இடைகமிட்டி உறுப்பினர்கள் வர்கீஸ், முகமது, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலு வலகத்தில் அரசியல் சாசன உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் கட்சியின் மூத்த தோழர். டி.சேஷகிரி தேசிய கொடி யினை ஏற்றினார். காரல் மார்க்ஸ் சிலை முன்பு மாவட்டச் செயற்குழு உறுப்பினர். ஐ.ஞானசெளந்தரி தலை மையில் அரசியல் சாசன உறுதி மொழியினை அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சந்தி ரன், பொன்.ரமணி, எம்.கனகராஜ், பி.பாலகிருஷ்ணன்,எம்.முருகேசன், பாலர் சங்க மாநில நிர்வாகி கே.ஜோதி லட்சுமி, உள்ளிட்ட ஓய்வுதியர்கள் சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி அருகே குடியுரிமை திருத் தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகள் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பென்னாகரம் பகுதி செயலாளர் கே.அன்பு சின்னம்பள்ளி பகுதி செய லாளர் சக்திவேல், பெண்ணாகரம் நகரச் செயலாளர் எஸ். வெள்ளியங் கிரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிஎம் முருகேசன், ரவி, திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.