tamilnadu

அவிநாசி பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாவிட்டால் அபராதம்

அவிநாசி, ஜூன் 13- முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றது. இந்நிலையில், அவிநாசி பேரூராட்சி சார்பில் வியாழனன்று ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களி டம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அனைவரும் வெளியில் வரும்போது கட் டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட் டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் முகக்கவசம் அணியாமல் வருவோர்களி டம் ரூ.100 அபராதம் விதித்து இலவசமாக முகக்கவச மும் வழங்கி அறிவுரை வழங்கப்பட்டது. இதுவரை ரூ.3 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.