அவிநாசி, ஜூன் 19- மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப் பட்ட விவசாய தியாகிகள் நினைவிடத்தில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் புதனன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 1970ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு பைசா மின் கட்டணம் உயர்த்தி யதைக் கைவிடக் கோரி விவ சாயிகள் எழுச்சிமிகு போராட்டம் நடத்தினர். அப்போது பெருமா நல்லூரில் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை அடக்குவதற்கு காவல்துறையை ஏவியது தமிழக அரசு. காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாரப்பகவுன்டர், ராம சாமிக்கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய விவசாயிகள் மூவர் உயிரிழந்தனர். இத்தியாகிகள் நினைவிடம் பெருமாநல்லூர் - ஈரோடு சாலையில் அமைந் துள்ளது. ஜூன் 19 விவசாய தியாகிகள் நினைவு தினம் என்பதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதனன்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக தமிழ் நாடு விவசாய சங்கத்தினர் திருப்பூர் சாலையிலிருந்து ஈரோடு சாலையில் உள்ள நினைவிடம் வரை பேரணியாகச் சென்றனர். இந்த நினைவஞ்சலி நிகழ் விற்கு, தமிழ்நாடு விவசாய சங்கத் தின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் தலைமை தாங் கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், திருப்பூர் வடக்கு ஒன்றியச் செய லாளர் கே.பழனிச்சாமி, விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.கே. கொழந்தைசாமி, எஸ்.வெங்க டாசலம், பல்லடம் பகுதி விவசாய சங்கத்தின் நிர்வாகி பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வடக்குப் பகுதி நிர்வாகிகள் வி.பி. சுவாமிநாதன், எஸ்.அப்புசாமி, கே. ரங்கசாமி, சிவலிங்கம், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செய லாளர் மணி, தலைவர் பழனிச் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தியாகிகள் நினைவி டத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.