tamilnadu

img

நெல்லை மேலப்பாளையம் பகுதி மக்களுக்கு சிபிஎம் உதவி

திருநெல்வேலி:
நெல்லை மேலப்பாளையம் பகுதி நாகம்மாள்புரம் மற்றும் அழகிரிபுரம் ஊர்களில் 60 குடும்பங்களுக்கு தலா மூன்று கிலோ அரிசி மற்றும் ஐந்து நாட்களுக்கான காய்கறி பொருட்களும் வழங்கப்பட்டன.
உணவின்றி தவித்த, அந்த பகுதி மக்களுக்கு ஆறுதலாக இந்த உணவு பொருட்கள் வழங்கிய நிகழ்வு அமைந்தது.இந்நிகழ்ச்சிக்கு மேலப்பாளையம் சிபிஎம்  கட்சி கிளை செயலாளர் மீராஷா தலைமை ஏற்று துவக்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாளை தாலுகா பொருளாளர் பீட்டர் ஜேக்சன், அழகிரிபுரம் கட்சி கிளை செயலாளர்  ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.