tamilnadu

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 2 மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மின்சார வாரிய திருத்த மசோதா 2020 ரத்து செய்ய கோரியும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை கண்டித்தும் சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து, நடுவக்குறிச்சி மின் வாரிய அலுவலகம் முன்பு மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு திருச் செந்தூர் கோட்ட செயலர் கணேசன் தலைமை வகித்தார். இதில் ஓய்வுபெற் றோர் நல அமைப்பு சங்க உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட மின்வாரிய ஊழி யர்கள் பலர் கலந்து கொண்டனர்.