districts

img

கேங்மேன் பணியாளர்களுக்கு சட்டப்பூர்வ சலுகை வழங்குக! மாவட்டங்களில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.1- கேங்மேன் பயிற்சி பணியாளர்  களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு விருப்ப இடமாறுதல் உத்தரவை விரைந்து வழங்க வேண்டும், விடுப்பு பயணப்படி சலுகைகள் வழங்க வேண்டும், மின்விபத்தை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், விடுபட்ட கேங்க்மேன்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு சட்டப்பூர்வ சலுகைகளை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தஞ்சாவூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மாவட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் து.கோவிந்தராஜூ, மத்  திய அமைப்பு மாவட்டச் செயலா ளர் காணிக்கைராஜ், மாநிலச் செய லாளர் எஸ்.ராஜாராமன் மற்றும்  மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி பெருநகர் வட்டம் சார் பில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள  மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டத்  தலைவர் நடராஜன் தலைமை வகித்  தார். மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், வட்டச் செயலாளர் எஸ்.கே.செல்வராசு, வட்ட பொரு ளாளர் பழனியாண்டி, டிஎன்பிஇஓ மாநில துணைப்பொதுச்செய லாளர் இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்  திய அமைப்பின் (சிஐடியு) கரூர்  மாவட்ட குழு சார்பில் கரூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் க.தனபால் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.