tamilnadu

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜூன் 3- மின்வாரிய சட்டம் 2020 ஐ கைவி டக்கோரி இராமநாதபுரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பாக அனைத்து சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொறியா ளர் சங்க நிர்வாகி ஜோசப் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொறியாளர் சங்க மாநில நிர்வாகி ஆர். குருவேல் பொறியாளர் கழக நிர்வாகி சங்கரானந்த், ஐக்கிய சங்க நிர்வாகி வடிவேல் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட் டத்தில் 30 அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.