tamilnadu

img

தொடர் கனமழை...  2-ஆவது முறையாக நிரம்பிய மஞ்சளாறு அணை... 

தேனி
வெப்பச்சலனம் காரணமாக தேனி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருவதால் கும்பக்கரை, சுருளி அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.  

இதனால் கொடைக்கானல் மலையடி வாரத்தில் இருக்கும் மஞ்சளாறு அணை ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரப்பியுள்ளது. மொத்தம் 57 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்மட்டம் கடந்த வாரத்துக்கு முன்பே 55 அடியை எட்டியது. தற்போது முழுகொள்ளளவை எட்டி வரும் நிலையில், தற்போது அணைக்கு வரும் 95 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மேலும் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, சிவஞானபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.