தஞ்சாவூர், டிச.22- தீக்கதிர் செய்தி எதிரொலியாக பேரா வூரணி அரசு மருத்துவமனையில் எக்ஸ்-ரே டெக்னீசியன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் உள்ள காமராஜர் தாலுகா அரசு மருத்து வமனையில் எக்ஸ்-ரே டெக்னீசியன் (ரேடியோ கிராபர்) இல்லாததால் பொதுமக் கள் சிரமப்பட்டு வருகின்றனர். வாரம் ஒரு நாள் புதன்கிழமை மட்டுமே எக்ஸ்-ரே டெக்னீசியன் வந்து செல்வதால் அன்றைய தினம் நூற்றுக்கணக்கான நோயாளிகள் காத்து நிற்கும் அவலமும், மற்ற நாட்களில் தனியார் மையத்துக்கோ அல்லது புதுக் கோட்டை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலை இருந்தது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் உத்தர வின் பேரில், தஞ்சாவூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் நுண்கதிர் வீச்சாளர் எஸ்.இளமாறன் என்பவரை, மாற்றுப்பணியாக 3 நாட்கள் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கி உத்த ரவு பிறப்பித்தார். இதையடுத்து சனிக் கிழமை அன்று எஸ்.இளமாறன் பேராவூ ரணிக்கு பணிக்கு சென்றார். இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பணி கள் இணை இயக்குனர் டாக்டர் ஏ.காந்தி கூறுகையில், “விரைவில் முழுநேர பணி யாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். இதுகுறித்து எஸ்.எம்.ஏ.அப்துல்சலாம் மற்றும் பொது மக்கள் கூறுகையில், “செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும், உடனடியாக நட வடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், சுகா தாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநருக்கும் நன்றி” என்றார்.