இராமநாதபுரம், மே 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி. காசிநாததுரை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு வரு மாறு: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 15 அன்று ரயில் மறியல் என அறி விக்கப்பட்டது. இதையடுத்து சதர்ன் ரயில்வே மதுரை கோட்ட அதிகாரிகள் மற்றும் இராமநாதபுரம் வட்டாட்சியர் முன்னிலையில் இராமநாத புரத்தில் மே 14 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி. காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். கலை யரசன்,எம்.ராஜ்குமார், இ.கண்ணகி, இராமநாதபுரம் தாலுகா செயலாளர் பி.செல்வ ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், நிறுத்தப்பட்ட ரயில்கள் மதுரை - இராமேஸ்வரம் பய ணிகள் ரயில், குமரி - இராமேஸ் வரம் எக்ஸ்பிரஸ், கோவை - இராமேஸ்வரம் தினசரி ரயில், இராமேஸ்வரம் - பாலக்காடு ஆகிய ரயில் களை இயக்குவதற்கு சென்னை பொதுமேலாளர் மூலம் ஆவன செய்வது, அதற்கு ஒரு மாதம் கால அவ காசம் வேண்டுமெனவும் வட மாநிலங்களில் இருந்து இராமேஸ்வரம் வந்து செல் லும் அஜ்மீர், அயோத்தியா, பனாரஸ், செகந்திராபாத் ஆகிய ரயில்கள் இருமார்க் கங்களிலும் இராமநாதபுரத் தில் நின்று செல்ல உத்த ரப்பிரதேச அதிகாரிகள் தான் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான முயற்சியை ரயில்வே சென்னை பொது மேலாளர் மூலம் செய்ய உறு தியளிக்கப்பட்டது. இது குறித்து கூடுதலாக கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியு றுத்த வேண்டும் என தீர்மா னிக்கப்பட்டது. இராமநாதபுரம், பரமக் குடி ஸ்டேஷனில் கோட்ச் இண்டிகேட்டர் உடனடியாக செயல்படுத்துவது,குடிநீர் வசதி செய்து கொடுப்பது என்று அதிகாரிகள் முன் னிலையில் முடிவானது. சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி ரயில் நிலை யங்களில் இருந்து இராமேஸ் வரம் வரை அந்தியோதயா ரயில் இயக்க வேண்டும் என் பதை நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். மேற்கண்ட பேச்சுவார்த்தை மூலம் ரயில் மறியல் போராட்டம் தற் காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.