tamilnadu

img

உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை

கோவை, ஜூன் 15- விவசாயிகளின் கடும் எதிர்ப்பை யும் மீறி பலத்த பாதுகாப்புடன் கோவை மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான நில அளவீடு நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் உயர் மின்  கோபுரம் அமைப்பதற்கு விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டி பகுதியை  அடுத்துள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க நில அளவை செய்யும் பணி கள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதி யைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத் தைத்தீவிரப்படுத்தினர். போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்ட னர். இதையடுத்து, நில அளவீடு செய் யும் பணிகள் தற்காலிகமாக கைவி டப்பட்டது.  இந்நிலையில், சனியன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் நிலம் அளவீடு செய்யும் பணி கள் தொடங்கப்பட்டது. இதற்கு அப் பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்புத்  தெரிவித்து வருகின்றனர். அதே போல், காவல் துறையினரும், அதி காரிகளும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நில அளவீடு செய்பவர்கள் நிலத்தை விட்டு வெளியே செல்லும்  வரை பொதுமக்கள் போராட்டத் தைக்கை விடுவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால், கரு மத்தம்பட்டியை சுற்றியுள்ள பகுதி களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.