tamilnadu

img

மருந்தாளுநர் பணியிடங்களை உடனே நிரப்பக் கோரி போராட்டம்

கும்பகோணம், ஆக.13- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அரசு மாவட்ட மருத்து வமனையில் கோரிக்கை அட்டை அணிந்து மருந்தாளுநர்கள் சங் கம் சார்பில் மாநில பொருளா ளர் விஸ்வேஸ்வரன் தலைமை யில் மருந்தாளுநர்கள் குமார், கருணாகரன், அமுதா உள்ளிட் டோர் கோரிக்கை அட்டை அணி ந்து பணியில் இருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து மருந்தாளுநர் சங்க மாநில பொருளாளர் விஸ் வேஸ்வரன் தெரிவித்ததாவது, தமிழகம் முழுவதும் பணியாற் றும் அனைத்து அரசு மருந்தாளு நர்கள், மருந்து கிடங்கு அலுவலர் கள் பணியில் இருந்து கொண்டு  கோரிக்கை அட்டை அணிந்து அர சின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் வரும் கடந்த 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்கள் நலன் கருதி மருந்தாளுநர் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட் டவை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது எனத் தெரி வித்தார்.