தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமுஎகச 16 ஆவது மாநில மாநாடு டிசம்பர் 04 துவங்கி 7-ஆம் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த மாநில மாநாட்டில்புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மதிப்புறு தலைவராக திரைக்கலைஞர் ரோகிணி, புதிய மாநில பொதுச்செயலாளராக களப்பிரன், மாநிலத் தலைவராக மதுக்கூர் ராமலிங்கம், மாநில பொருளாளராக சைதை ஜெ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
