tamilnadu

நவ.6-ல் தஞ்சையில்  உள்ளூர் விடுமுறை

 தஞ்சாவூர் அக்.31- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளதாவது, “தஞ்சை மாவட்டத்தில் மன்னர் ராஜராஜ சோழனின் 1034 ஆவது சதய விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.  இதற்கு பதிலாக நவம்பர் 23ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறை சட்டம் 1881 கீழ் வராது என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளும், நவ.6 ஆம் தேதியன்று குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்” என தெரிவித்துள்ளார்.