tamilnadu

img

சோசலிச லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

சென்னை, நவ. 15 - விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் என். சங்கரய்யாவின் முத லாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று (நவ.15) கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவல கத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் தோழர் என். சங்கரய்யா உரு வப்படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதல் தலைமுறைத் தலைவர்

அப்போது பேசிய ஜி. ராமகிருஷ்ணன், “மாநிலம் முழுவதும் கட்சி அமைப்புகள் சார்பில் தோழர் சங்கரய்யா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கிய முதல் தலை முறைத் தலைவர்களில் ஒருவர். 1940-களில் ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையை தோழர் ஏ.கே. கோபாலன் தொடங்கி வைத்தார். வைகை ஆற்றில் நடந்த அந்த கிளைக்  கூட்டத்தில் என். சங்கரய்யா, கே.பி.ஜானகி யம்மாள் உள்ளிட்டோர் இருந்தனர். அந்நியர் ஆட்சிக்கு எதிராக போராடி யதால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பட்டப்படிப்பை அவரால் முடிக்க  முடியவில்லை. 18 மாதங்கள் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த என். சங்கரய்யா முழுநேர ஊழியராக மாறினார். ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளராக, 1952-ஆம் ஆண்டிலிருந்து மாநில மையத்தில் இருந்து பணியாற்றும் ஊழியராக செயலாற்றினார்.

லட்சியத்தை நிறைவேற்றுவோம்!

சட்டமன்ற உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர், அகில இந்திய பொதுச்செயலாளர், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், மாநிலச் செய லாளர் என நிறைவாக பணியாற்றி 102-ஆவது வயதில் மறைந்தார். மார்க்சிஸ்ட் கட்சி துடிப்புடன் செயல்பட அவர் ஆற்றிய பணி அடிப்படையாக அமைந்தது. 80 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்காக, மனித குல விடுதலைக்காக, சோசலிச சமுதா யத்தை அமைப்பதற்காக அயராது அர்ப் பணிப்போடு பாடுபட்டார். அவரின் லட்சி யத்தை நிறைவேற்ற சபதமேற்போம்” என்றார்.