tamilnadu

img

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

சென்னை,டிசம்பர்.23- அரசு ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
சமீப காலங்களில் ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததையடுத்து. தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் முதற்கட்டமாக 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.