states

img

ஹரியானாவில் செங்கல் சூளையில் சுவர் இடிந்து விபத்து!

ஹரியானா,டிசம்பர்.23- செங்கல் சூளையில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புடானா கிராமத்தில் நேற்று இரவு திடீரென செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாத குழந்தை உட்பட 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 5 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 
இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் செங்கல் சூளையில் தங்கி வேலை கூலி வேலை செய்வதும் தெரியவந்துள்ளது.