tamilnadu

img

கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல் - 3 பேர் கைது

கோவை,டிசம்பர்.23- கோவையில் மணிகண்ட பிரபு என்பவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 6 குண்டுகளுடன் கூடிய கள்ளத் துப்பாக்கியை பீகாரிலிருந்து வாங்கி வைத்திருந்த சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு ( 22), காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரி ஸ்ரீ (23) மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் ராஜ் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
முதற்கட்ட விசாரணையில் ஐ.டி ஊழியரான மணிகண்ட பிரபுவுக்காக துப்பாக்கி வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது.