புதுதில்லி,டிசம்பர்.23- தேசிய மனித உரிமை ஆணையத் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராம சுப்பிரமணியனை நியமித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இவர் கடந்த 2006 முதல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2009 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
2016 முதல் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 2019 ஜூன் முதல் ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்துள்ளார். 2019 செப்டம்பர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார்