விக்கிரவாண்டி, டிச.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு வரும் ஜனவரி 3,4,5- ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடை பெறுகிறது. இந்த மாநாட்டை விளக்கி மாவட்டம் முழுவதும் 100 மையங்களில் கலை குழுக்களுடன் பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி வட்டம், கோழிப்பண்ணை ஊராட்சியில் கல்லை குறிஞ்சி கலைக்குழுவினர் புதுவை தவில் விநாயகம் தலைமையில் பாடகர்கள் மா.மோகன், கே.மணிமேகலை ஜி,சந்துரு எஸ்.பிரவீன் குமார் ஆகியோர் கிராமியப் பாடல்களுடன் பிரச்சாரம் செய்தனர். கோழிப்பண்ணையில் தொடங்கிய பிரச்சாரப் பயணம் நேமூர், முண்டியம் பாக்கம் வழியாக சென்று விக்கிர வாண்டியில் முடித்தனர். மேலும், மாநில மாநாட்டை விளக்கி கட்சியின் விக்கிரவாண்டி வட்டக்குழு சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, வி.கிருஷ்ணராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள். எம்.சேகர், டி.அஞ்சாபுலி, கோழிப்பண்ணை கிளைச் செயலாளர் பக்தசலம், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.