districts

img

இனி இது போன்ற வீடியோக்கள் யூடியூப்-இல் இருந்து நீக்கப்படும்!

இனி இது போன்ற வீடியோக்கள் யூடியூப்-இல் இருந்து நீக்கப்படும்!

இந்தியாவில் யூடியூப் வீடியோவுக்கும், அதன் Thumbnail-க்கும் தொடர்பில்லாமல் காணப்படும் வீடியோக்கள் கண்டறிந்து, அவற்றை விரை வில் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் அறி வித்துள்ளது. இந்தியாவில் கிளிக்பைட் (Clickbait) எனப்படும் தலைப்புக்கும், வீடியோவில் உள்ள கண்டெண்ட்டுக்கும், Thumbnail-க்கும் தொடர்பில்லாத பல வீடியோக்கள் யூடியூப்-இல் பகிரப்பட்டு வருகிறது. பல நேரங்களில், இவை தவறான தகவல்கள் பரப்பக்கூடியதாகவும், வீடியோவின் நம்பகத்தன்மையை சிதைக்கிறதாகவும் உள்ளதாக யூடியூப் பயனர்கள் குற்றச்சாட்டை தெரி வித்து வருகின்றனர். இந்த சூழலில், இது போன்ற கிளிக்பைட் வீடியோக்களை கண்டறிந்து நீக்க முடிவு செய்துள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது. இந்த பிரச்சனை குறிப்பாக முக்கிய செய்திகள் (Breaking News) மற்றும் தற்போதைய நிகழ்வுகளை உள்ளடக்கும் செய்திகள் (Current Events) ஆகியவற்றில் அதிகம் காணப்படுவதாக யூடியூப் தெரிவித்துள்ளது. யூடியூப் கண்டெண்ட் உருவாக்குபவருக்கு படிப்படி யாக இது குறித்த புரிதலை ஏற்படுத்தி, வரும் மாதங்களில் கிளிக்பைட் வீடியோக்களை நீக்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் 18.3 பொது பீட்டா வெர்ஷன் வெளியீடு!

ஆப்பிள் நிறுவனம், அதன் ஐஓஎஸ் 18.3 பொது பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியான ஐஓஎஸ் 18.2 அப்டேட்டில், ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களின் (Apple Intelligence features) இரண்டாவது தொகுதியை அறிமுகப்படுத்தியது. அதில் ஏஐ மூலம் புகைப்படங்களை உருவாக்கும் Image Playground மற்றும் Genmoji ஆகிய அம்சங்களும், ஐபோன் கருவியுடன் ஓபன் ஏஐ-இன் சாட்ஜிபிடி-யை ஒருங்கிணைத்து Siri-இன் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஐஓஎஸ் 18.2 வெர்ஷனை ஒப்பிடும்போது, ஐஓஎஸ் 18.3 வெர்ஷனில் சிறிய அளவிலான அப்டேட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ரோபோ வாக்யூம் கிளீனர்கள் (Robot Vacuum Cleaner) போன்ற ஸ்மார்ட்ஹோம் கருவிகளை (Smart Home Devices) இயக்கும் ‘ஹோம் ஆப்’ அம்சம், சில user-interface-களும், Bug-க்கான திருத்தங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஐஓஎஸ் 18 பீட்டா திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஐபோன்களிலும், ஐஓஎஸ் 18.3 பொது பீட்டா வெர்ஷனை பயன்படுத்த முடியும். இருப்பினும், ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் மற்றும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் மட்டுமே ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களை பயன்படுத்த முடியும். ஐஓஎஸ் 18.3 பொது பீட்டா வெர்ஷனை பயன்படுத்த, முதலில் https://beta.apple.com/sp/betaprogram/ என்ற இணைப்பிற்குச் சென்று பொது பீட்டாவில் Sign up செய்ய வேண்டும். பிறகு, உங்கள் ஐபோனில் Settings > General > Software Update ஆகியவற்றுக்கு  சென்று பீட்டா அப்டேட்டை கிளிக் செய்து, ஐஓஎஸ் 18ஐ தேர்வு செய்து, அதனை பதிவிறக்கி Install செய்து பயன்படுத்தலாம்.  (குறிப்பு: Software Update செய்வதற்கு முன்பு உங்கள் ஐபோனை Back up எடுத்துக்கொள்ளவும்.)