கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று தேனியில் வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ள மாநில அளவில் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.