districts

img

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்ஐசி ஊழியர்கள் நிவாரணம்

கடலூர், டிச.22 – கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எல்ஐசி ஊழியர் சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. வேலூர் கோட்டம் எல்ஐசி, பென்ஷனர்கள் சங்கம், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த உதவிகளை வழங்கின. கடலூர் தோட்டப்பட்டு பகுதியில் 20 குடும்பங்களுக்கும், மாற்றுத்திறனாளி குடி யிருப்பு பகுதியைச் சேர்ந்த 25 குடும்பங்க ளுக்கும், நடுவீரபட்டு - சி என் பாளை யம் பகுதியில் 35 துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கும், பண்ருட்டி சுற்றுவட்டார பகுதியில் 110 குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இணைச் செயலாளர் கோபிநாத், பென்ஷனர்கள் சங்க வேலூர் கோட்ட செயலாளர் சுகு மாரன், பொருளாளர் மணவாளன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்டத் துணைத் தலைவர் ராமன், இணைச் செயலாளர்கள் ரபீக் அகமது,  ஜெய பிரகாஷ், பொருளாளர்  கணேசன், துணைத் தலைவர் வைத்திலிங்கம் ஆகி யோர் கலந்து கொண்டு நிவாரண உதவி களை வழங்கினர். மூன்று பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் கிளைச் செயலாளர் நித்யா, தலைவர் ராஜு, பண்ருட்டி கிளைச் சங்கத் தலைவர் சுகுமாரன், குமரவேல், எல்ஐசி நெல்லிக்குப்பம் கிளை மேலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.