districts

img

கடலூர் மாவட்டத்தை பேரழிவு பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

கடலூர், டிச. 22 – கடலூர் மாவட்டத்தை பேரழிவு பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக குறை கேட்பு அரங்கில் விவசாயி கள் குறை தீர்வு மற்றும் மேம்பாட்டிற்  கான ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை கள் குறித்து பேசினர். தமிழ்நாடு விவசாய சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் கோ.மாதவன்: கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரழிவு பாதித்த மாவட்ட மாக ஒன்றிய அரசு அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் நிவா ரணம் வழங்க வேண்டும். தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்கு சென்னையைப் போல 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.  சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும், முழுமையாக சேத மடைந்த வீடுகளுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தரு வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தை குடிசை இல்லா மாவட்டமாக மாற்றுவதும், அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் 5 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநகராட்சி நகராட்சி பேரூ ராட்சிகளுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். மாவட்ட முழுவதும் நெல், மணிலா, வாழை, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த இடங்களில்  மகசூல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க தொழில்நுட்ப உதவிகளை செய்ய வேண்டு. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். கே.சரவணன்: தென்பெண்ணையாற்றில் நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். முக்கிய இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். புயலால் சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு வீடு திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும். என்எல்சிக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பண்ருட்டி விவசாய சங்க தலைவர் தேவநாதன்: கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். பட்டா மாற்றம் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். உடனே மாவட்ட ஆட்சியர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அண்ணா கிராமம் காந்தி: அர சூரில் ஏற்கனவே இருந்த தடுப் பணை தற்போது ஏற்பட்ட வெள்ளத்  தால் அடித்து செல்லப் பட்டது. அதை அதிகாரிகள் தற்போது சீர மைத்துள்ளனர். ஆனால் அந்த அணையை உயர்த்தி கட்டிதர  வேண்டும். எங்கள் பகுதி விவசாயிக ளுக்கு நீர்பாசன கடன் வழங்கப்பட்டது. ஆனால் நீர்பாய்ச்சுவதற்கு மின்சார மோட்டார்களுக்கு மின்சாரம் வழங்கப்  படவில்லை. இதனால் நாங்கள் கடனை திருப்பி செலுத்த முடியா மல் உள்ளோம் என்று கூறினார். உடனே ஆட்சியர் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக நட வடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  பரங்கிப்பேட்டை ரவீந்திரன்:  இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஏற்றவாறு விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூரை பேரிடர் மாவட்ட மாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீட்டு அளவுக்கு ஏற்ப முழு நிவார ணம் வழங்க வேண்டும். எங்கள் பகுதி யில் தேசிய நெடுஞ்சாலை அமைக் னகும் பணியால் விலை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.