புதுதில்லி,டிசம்பர்.23- காலி பணியிடங்களை நிரப்பச் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களை நிரப்பச் சிறப்பு கலந்தாய்வு நடத்தவும் தேவைப்பட்டால் காலியாக உள்ள என்.ஆர்.ஐ இடங்களையும் பொதுப்பிரிவில் சேர்த்து கலந்தாய்வு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.