court

img

டி.எம்.கிருஷ்ணாவிற்கு விருது வழங்க தடையில்லை - உயர்நீதிமன்றம்

சென்னை,டிசம்பர்.13- இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து டி.எம்.கிருஷ்ணா அவதூறு பரப்புவதாகவும் அதனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் அவருக்கு விருது வழங்கக் கூடாது என சுப்புலட்சுமியின் பேரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 இந்த வழக்கு விசாரணையில் டி.எம்.கிருஷ்ணாவிற்கு விருது வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்
இந்த வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்துள்ளது.