tamilnadu

img

சிபிஎம் 24ஆவது மாநில மாநாடு இலச்சினை

சென்னை, நவ. 15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு இலச்சினையை மூத்தத் தலைவர் டி.கே. ரங்கராஜன் வெளியிட் டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு, 2025 ஜனவரி 3 முதல் 5 வரை விழுப்புரத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளியன்று (நவ.15) கட்சியின் மாநி லக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் டி.கே.ரங்கராஜன் இலச்சினையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போராட்டங்களுக்கு திட்டமிடப்படும்

அரசுத் துறைகளில் பணி நியமனம் இன்மை, காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யாமை, அவுட்சோர்சிங் முறையில் பணிகளை மேற்கொள்ளு தல் போன்றவற்றால் இளைஞர்களின்எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு - குறு தொழில் முனைவோர், வியாபாரி கள் என அனைத்து மக்களின் வாழ்வும் நொறுங்கிக் கிடக்கிறது. அதற்கு அடிப்படை யாக உள்ள ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, அவர்கள் கிளப்பி விடும் மதவெறி அரசியலை எதிர்த்து தமிழ்நாட்டில் வலுவான போராட்டங்கள் நடத்துவது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் செயல்பாடு, மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தீர்க்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் ஒரு ஆய்வை மேற்கொள்ள உள் ளோம். அதன்மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை களை மாநாடு திட்டமிடும். மாநில சுயாட்சி, மாநில உரிமை பறிப்பு, இந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவது பற்றியும் மாநாடு தீர்மானிக்கும்.

விழுப்புரத்தில் பிரம்மாண்டப் பேரணி

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அந்நிய மூலதனம் சிவப்புக் கம்பளம் விரித்து  வரவேற்கப்படுகிறது. தொழில் வளர்ச்சி முக்கியம். அதே நேரத்தில், வெளிநாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூறும் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அனைத்து வகையான சலுகைகளையும் வழங்கி விட்டு, தொழி லாளர்களின் உரிமைகள் காவு கொடுக்கப்படு கிறது. சங்கம் வைக்கும் உரிமையைக் கூட தர மாட்டோம் என்று சொல்கிற நிர்வாகங்களின் கூற்றை, ஏற்று செயல்படு வதை கண்டித்து எதிர்காலத்தில் வலுமிக்க போராட்டங்கள் நடத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். ஜனவரி  3-ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி விழுப்புரத்தில் நடைபெறும். இதில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார். சாதிவாரிக் கணக்கெடுப்பு மேலும், செய்தியாளர்களின் கேள்வி களுக்குப் பதிலளித்த கே. பாலகிருஷ்ணன், “சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசு நடத்த வேண்டும் என்று சிலர் கோருகிறார்கள். சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை சட்டப்படி ஒன்றிய அரசுதான் முறைப்படி செய்ய முடியும்” என்றார். வக்காலத்து வாங்கும் சீமான் “சீமான் பேசுவதற்கெல்லாம் பதில்  சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட வில்லை. அவர் ஹிட்லருக்கு சிலை வைப்பார்  போல் உள்ளது. மக்களின் உரிமைகளை பறிக்கிற சர்வாதிகாரத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். ஒரு சிலர் பாசிசத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை கிண்டல் செய்கின்றனர். பாசிசம், சர்வாதிகாரத்தை எதிர்த்துத் தான் உலக மக்கள் போராடு கிறார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் போராட்டம் நடக்கும். மாறாக, சர்வாதி காரத்தை ஆதரித்து, பாசிசத்திற்கு வக்காலத்து வாங்குவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றும் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.