சென்னை, நவ.15 - தனியார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்து இயக்கியதால் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள் ளது. எனவே, இத்தகைய நட வடிக்கையை தவிர்க்க வேண்டு மென்று தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்க ருக்கு எழுதியுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு: அரசு போக்குவரத்துக் கழகங் கள் தமிழகத்தின் மிகப்பெரிய சேவை நிறுவனமாகும். தினமும் 1.75 கோடி மக்கள் அரசு பேருந்து களை பயன்படுத்துகின்றனர். திருவிழா, பருவகால நிகழ்வு, பண்டிகைகளின் போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது 50 ஆண்டுகளாக நடக்கிறது. இதற்கு மாறாக, அண்மை யில் ஆயுதபூஜை, தீபாவளியை யொட்டி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, சிறப்பு இயக்கம் செய்யப்பட்டது. இது எவ்விதத்திலும் சரியற்றது. அரசு பேருந்துகளை சிறப்பு இயக்கத் திற்கு பயன்படுத்தினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 90 வரை செலவாகும். தனியார் பேருந்து களை வாடகைக்கு எடுத்து இயக்கி னால் 51 ரூபாய் 25 பைசா மட்டுமே செலவாகும். சிறப்பு இயக்கத்தை ஒட்டி பேருந்துகளின் வழித்தடத்தை மாற்றினால் தினசரி உபயோகிக் கும் பயணிகள் பாதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது. இந்த இரண்டு காரணங்களும் தவறானது. கழக பேருந்துகளை இயக்கி னால் ரூ.90 செலவாகும் என்பது சரி யற்றது. பல கழகங்களில் கிலோ மீட்டருக்கான இயக்க செலவு ரூ.65 மட்டுமே. 90 ரூபாய் செலவாகும் என்று எடுத்துக் கொண்டால் கூட, பேருந்து இயக்கத்தில் மாறும் செலவினம் (வேரியபல் காஸ்ட்), நிரந்தர செலவினம் (பிக்சட் காஸ்ட்) என்ற இரண்டு வகையான செலவினங்களும் உள்ளன. தனியார் பேருந்துகளை இயக்கினாலும் நிரந்தர செல வினத்தில் எவ்வித மாறுபாடும் ஏற்படாது. மாறும் செலவினம் மட்டுமே மிச்சமாகும். மாறும் செலவினம் தற்போது கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.18 ஆகிறது. தனியார் பேருந்துகள் இயக்குவதால் ரூ.18 மட்டுமே மிச்ச மாகும். அதேசமயம், சிறப்பு இயக்கத்தின் மூலம் 1 கிலோ மீட்ட ருக்கு ரூ. 30க்கு மேல் வருவாய் வரும். எனவே, சிறப்பு இயக்கம் இயக்குவதன் மூலம் கிலோ மீட்டருக்கு ரூ.12 கழகத்திற்கு வருவாய் கிடைக்கும்.
நியாயமற்ற இழப்பு
இவ்வாறு வருவாய் கிடைப்பதை தவிர்த்துவிட்டு, தனி யார் பேருந்துகளை இயக்கியதன் மூலம் சுமார் ரூ.5 கோடி கழகங் களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்துக் கழகங் களுக்கு தேவையற்ற முறையில் ரூ. 5 கோடி இழப்பு ஏற்படுவது எவ்விதத்திலும் நியாயமற்றது. 2017ஆம் ஆண்டு வரை ஒரு நாளைக்கு 2 கோடியே 10 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்தனர். தற்போது 1 கோடியே 75 லட்சம் பேர் தான் பயணிக்கின்ற னர். 2 கோடிக்கு மேற்பட்ட பய ணிகளை கையாண்ட போக்கு வரத்துக் கழகங்களால் 1.75 கோடி பயணிகளை கையாள முடியாது என்று கூறுவதும் சரியற்றது. 321 முதல் 328 அரசாணைகளை ரத்து செய்க 31.10.2018ஆம் தேதி வெளி யிடப்பட்ட 321 முதல் 328 வரையி லான அரசாணைகள் தான் போக்கு வரத்துக் கழகங்கள் சீர்குலை வதற்கும், பயணிகள் எண்ணிக்கை குறைவதற்கும் அடிப்படையான காரணமாகும். இந்த அரசாணை களின் மூலம் பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதனால் பய ணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு கழக வருவாயும் பாதிக்கப் பட்டது. இந்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வரு கிறோம். எனவே, இவற்றை பரி சீலித்து பொதுத்துறையான போக்குவரத்துக்கழகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.