நாகர்கோவில், மார்ச் 5- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர் முகம்மது சாகிப் ஒலியுல்லாஹ் (ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 9 ஆம் தேதியன்றும், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 10 ஆம் தேதியன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தி லுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 9 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடு முறைக்கு ஈடாக மே மாதத்தில் இரண்டாவது சனிக்கிழ மையன்றும், 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜுன் மாதத்தில் இரண்டா வது சனிக்கிழமையன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங் களுக்கு வேலை நாளாக இருக்கும். 9, 10 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும். அரசுப் பள்ளித்துறை சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு தேர்வுகளுக்கு எவ்வித இடையூறு மின்றி கல்வி நிறுவனங்கள் தேவையான பணியா ளர்களை கொண்டு இயங்கும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.