சென்னை,நவ.15- ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023 செப்டம்பரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரு மான சி.வி. சண்முகம் பேசிய பேச்சு முத லமைச்சரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி. வேல்முருகன் முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி, ஆளுங்கட்சியின் தவறு களை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜன நாயக கடமை தான். ஆனால், அதில் கண்ணியம் தேவை. பேசும்போது எச்சரிக்கையுடன், கண்ணியத்துடன் பேச வேண்டும். தேர்தலின் போது வாக்குறுதி களை கொடுப்பது உலக அளவில் உள்ள நடைமுறைதான். வாக்குறுதிகளை நிறை வேற்றாததை சுட்டிக்காட்டலாம். மனுதாரர் சி்.வி. சண்முகம் சாதாரண நபர் அல்ல, சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர். அவர் இவ்வாறு பேசக்கூடாது, பொறுப்போடு பேச வேண்டும். அந்த காலம் போல் இப்போது இல்லை, அடுத்த தலைமுறையினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமுறை மாறி விட்டது, நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை என்று குறிப்பிட்டார். இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் இதுபோல பேசுவது முதன்முறை அல்ல. மூன்று வழக்குகள் உள்ளன. அது சம்பந்தமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன என்று சுட்டிக் காட்டினார். இதையடுத்து அனைத்து வழக்குகளை யும் சேர்த்து விசாரித்து உத்தரவு பிறப்பிப்ப தாக நீதிபதி தெரிவித்து, விசாரணையை நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.